சரியான வழிகாட்டுதல் இருந்தால் இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது கலெக்டர் ராமன் பேச்சு
சரியான வழிகாட்டுதல் இருந்தால் இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாக கலெக்டர் ராமன் பேசினார்.
வேலூர்,
விழிப்புணர்வு கருத்தரங்கம்
வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் வேலூர் மாநகராட்சி சார்பில், தூய்மை பாரதம் திட்டத்தில் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மென்பொருள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் புதிய மென்பொருள் பற்றி விளக்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் எஸ்.ஏ.ராமன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்து புதிய மென்பொருளை அறிமுகம் செய்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
புதிய மென்பொருள்
கடந்த 2014–ம் ஆண்டு தூய்மை பாரதம் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் வேலூர் நகரில் தூய்மையை பராமரிக்க குப்பைகளை உடனுக்குடன் அகற்ற புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எந்த திட்டமாக இருந்தாலும் அதை மக்கள் ஏற்றுக்கொண்டால்தான் அந்த திட்டம் வெற்றியடையும்.
தற்போது வேலூர் மாநகராட்சி பகுதிகளில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை புகைப்படம் எடுத்து அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தும் வகையில் புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை தங்கள் போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மாணவ – மாணவிகள் இந்த மென்பொருளை பயன்படுத்தி நமது நகரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளலாம்.
தோல்வி என்பது அனுபவம்
உங்கள் திறமைகள் பல வழிகளில் வெளிக்கொண்டுவரப்படுகிறது. குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றியை கூறலாம். இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இருந்தால் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. இந்தியா விரைவில் வல்லரசாகும். பிரச்சினை இல்லாத வாழ்க்கையே கிடையாது. சரியான திட்டமிடுதலுடன், அதற்கேற்ப உழைக்க வேண்டும்.
தோல்வி என்பது அனுபவம். அதுதான் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும். மாணவ – மாணவிகள் புதிய மென்பொருளை பயன்படுத்துவதோடு மற்றவர்களிடத்திலும் இதை கொண்டு சேர்க்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் அருளரசு, துணை முதல்வர் ஸ்ரீராம்பாபு ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கலைவாசன் நன்றி கூறினார்.
அதைத் தொடர்ந்து கல்லூரி முன்பு நடந்த தூய்மை பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Next Story