கன்னியாகுமரியில் கடல் சீற்றம் படகு போக்குவரத்து ரத்து
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
கன்னியாகுமரி,
கடல் சீற்றம்
கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலம் ஆகும். இங்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு மூலம் கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு சென்று பார்வையிடுகிறார்கள். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுபோக்குவரத்து நடத்தப்படுகிறது.
நேற்று காலையும் வழக்கம்போல் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் திரண்டு சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். அதன்பிறகு கடலில் நீராட வந்தனர். அப்போது கடலில் ‘திடீர்’ சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் கரையில் வந்து மோதின.
சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்ததால் சுற்றுலா பயணிகளிடையே அச்சம் ஏற்பட்டது. மேலும் கடலிலும், கடற்கரையிலும் சூறாவளி காற்று வீசியது. இந்த திடீர் காலநிலை மாற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் இறங்காமல் கரையில் நின்று கொண்டனர்.
படகு போக்குவரத்து ரத்து
நேற்று காலை 6 மணி முதலே விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட படகுத்துறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்.
ஆனால் கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story