கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 1,000 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 1,000 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 16 Feb 2017 4:30 AM IST (Updated: 16 Feb 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 1,000 கிலோ ரே‌ஷன் அரிசி குளச்சலில் பறிமுதல் செய்யப்பட்டது.

குளச்சல்,

ரே‌ஷன் அரிசி


குமரி மாவட்ட பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு அதிகளவில் ரே‌ஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. அதனை தடுப்பதற்காக பறக்கும்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் குமரி மாவட்ட பறக்கும்படை தாசில்தார் இக்னேசியஸ் சேவியர், துணை தாசில்தார் சந்திரசேகர், வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், டிரைவர் ஜான்பிரைட் ஆகியோர் நேற்று காலை குளச்சல் பகுதியில் ரே‌ஷன் பொருள் கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

1000 கிலோ


அப்போது குளச்சல் துறைமுக தெருவில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தின் அருகில் அதிகளவில் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டனர். அந்த மூடைகளை சோதனை செய்தபோது, 1000 கிலோ ரே‌ஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். பின்பு அதனை பறிமுதல் செய்து காப்புக்காட்டில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் அரிசியை கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்த பதுக்கி வைத்திருந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story