அரசு மருத்துவமனையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு சிகிச்சை


அரசு மருத்துவமனையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு சிகிச்சை
x
தினத்தந்தி 16 Feb 2017 3:23 AM IST (Updated: 16 Feb 2017 3:23 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுமுகம் (வயது 52).

சென்னை,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுமுகம் (வயது 52). குடல் இறக்க நோயால் பாதிக்கப்பட்ட இவர் இதற்காக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் படி மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இதையடுத்து ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சில தினங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூவத்தூரில் இருக்கும் நேரத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது அங்குள்ளவர்கள் இடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story