திருவொற்றியூரில் ரேஷன் கடையில் பொதுமக்கள் முற்றுகை
திருவொற்றியூர் சண்முகபுரம் விஸ்தரிப்பு பூம்புகார் நகரில் ரேஷன் கடை உள்ளது.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் சண்முகபுரம் விஸ்தரிப்பு பூம்புகார் நகரில் ரேஷன் கடை உள்ளது. இங்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 3 மாதங்களாக உளுந்து, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் சரியாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி திருவொற்றியூர் உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள் திருவொற்றியூர் நகராட்சி முன்னாள் தலைவர் ஜெயராமன், மாதர் சங்க தலைவி பாக்கியம் ஆகியோர் தலைமையில் நேற்று காலை ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந் ததும் சாத்தாங்காடு போலீசார் மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானம் செய்தனர். இனிமேல் ரேஷன் கடையில் முறையாக பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். அதை ஏற்று முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story