வரதட்சணை கொடுமை: இளம்பெண் கை நரம்பை அறுத்து தற்கொலை கணவர் கைது
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் கை நரம்பை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் அவரது கணவரை கைது செய்தனர்.
வசாய்,
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் கை நரம்பை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் அவரது கணவரை கைது செய்தனர்.
வரதட்சணை கொடுமைபால்கர் மாவட்டம் விரார் கிழக்கில் உள்ள ஹரிஸ்சந்திரா கட்டிடத்தில் வசித்து வருபவர் சந்திப் கதம். எம்.பி.ஏ. பட்டதாரி. இவரது மனைவி அஸ்வினி(வயது26). இவர்களுக்கு திருமணம் நடந்து 1½ ஆண்டு தான் ஆகிறது. திருமணத்தின் போது அஸ்வினியின் பெற்றோர் சந்திப் கதமின் குடும்பத்திற்கு வரதட்சணையாக ரூ.10 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், மேலும் ரூ.5 லட்சம் கேட்டு சந்திப் கதமின் குடும்பத்தினர் அஸ்வினியை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் அஸ்வினி சிறுநீரகம் செயலிழந்து அவதிப்பட்டார். அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்கொலைஇது சந்திப் கதமின் குடும்பத்தினருக்கு அஸ்வினி மீதும் மேலும் வெறுப்பை உண்டாக்கியது. இந்தநிலையில், கணவர் குடும்பத்தினரின் கொடுமையை தாங்க முடியாமல் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அஸ்வினி சம்பவத்தன்று இரவு தனது கை நரம்பை கத்தியால் அறுத்துக்கொண்டார். இதில், ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்வினி பரிதாபமாக இறந்து போனார்.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திப் கதமை நேற்றுமுன்தினம் கைது செய்தனர். அவரது தாய் மற்றும் தந்தை தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.