கொலைக்கைதி தப்பி ஓடிய சம்பவம்: 10 போலீசார் பணி இடைநீக்க ம் கைதியை மனைவியுடன் சந்திக்க வைக்க 3 போலீசார் லஞ்சம் வாங்கியது அம்பலம்
கொலைக்கைதி தப்பிஓடிய சம்பவத்தில் 10 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அந்த கைதியை அவரது மனைவியிடம் பேச வைப்பதற்கு 3 போலீசார் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதும் அம்பலமாகி உள்ளது.
மும்பை,
கொலைக்கைதி தப்பிஓடிய சம்பவத்தில் 10 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அந்த கைதியை அவரது மனைவியிடம் பேச வைப்பதற்கு 3 போலீசார் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதும் அம்பலமாகி உள்ளது.
கொலைக்கைதி தப்பிஓட்டம்நவிமும்பை தலோஜா சிறையில் கொலை வழக்கில் தண்டனை பெற்று அடைத்து வைக்கப்பட்டு இருந்தவர் ஹனுமந்த் சதாசிவ் பாட்டீல்(வயது28). இவரை அண்மையில் போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக மும்பை ஜே.ஜே. அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடி விட்டதாக கூறப்பட்டது. அவருக்கான பாதுகாப்பு பணியில் 10 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இவர்களில் 3 பேர் ஹனுமந்த் சதாசிவ் பாட்டீலை அழைத்துக்கொண்டு சென்றவர்கள்.
இந்தநிலையில், அவர் தப்பிஓடியது பற்றி 3 மணி நேரமாகியும் போலீசார் 10 பேரும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கவில்லை. இதுபற்றி அறிந்ததும் உயர் அதிகாரிகள் அவர்கள் 10 மீதும் விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
இந்த விசாரணையின் போது ஹனுமந்த் சதாசிவ் பாட்டீல் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிஓடவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:–
ரூ.40 ஆயிரம் லஞ்சம்சம்பவத்தன்று ஹனுமந்த் சதாசிவ் பாட்டீலின் மனைவி கிராண்ட் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்து இருக்கிறார். ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர் சிறைக்கு திரும்பும் வழியில், போலீசாரிடம் தனது மனைவி ஓட்டலில் தன்னை சந்திப்பதற்காக தங்கியிருப்பதை தெரிவித்து இருக்கிறார்.
மனைவியுடன் தன்னை பேச அனுமதித்தால் ரூ.40 ஆயிரம் தருவதாக போலீசாரிடம் கூறியிருக்கிறார். இதை கேட்டதும் போலீசார் 3 பேரும் தங்களது கடமையை மறந்து அவர் மனைவி தங்கியிருந்த ஓட்டலுக்கு அவரை அழைத்து சென்றுள்ளனர்.
10 போலீசார் பணி இடைநீக்கம்அங்கு ஹனுமந்த் சதாசிவ் பாட்டீல் மனைவியிடம் இருந்து லஞ்ச பணத்தை வாங்கி போலீசாரிடம் கொடுத்து இருக்கிறார். பின்னர் இருவரையும் ஓட்டல் அறையில் தனிமையில் பேச அனுமதித்து விட்டு போலீசார் 3 பேரும் வெளியே நின்றுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட ஹனுமந்த் சதாசிவ் பாட்டீல் ஓட்டல் அறையின் பின்பக்க ஜன்னல் வழியாக குதித்து அங்கிருந்து தப்பிஓடியது தெரியவந்தது.
இதையடுத்து பணத்திற்கு விலைபோன 3 போலீசார் மற்றும் கைதி தப்பிஓடியது பற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத மற்ற 7 போலீசார் என 10 பேரும் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை நவிமும்பை துணை போலீஸ் கமிஷனர் சுதாகர் பத்தாரே உறுதிப்படுத்தினார்.