ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைகோள்கள்: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாராயணசாமி பாராட்டு
ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைகோள்களை அனுப்பிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு முதல்–அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
அப்போது அவர் கூறியதாவது:–
விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து
இஸ்ரோ சார்பில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்வெளியில் 104 செயற்கைகோள்களுடன் செலுத்தப்பட்டுள்ளது. இது உலகத்திலேயே மிகப்பெரிய சாதனையாகும். இதற்கு முன்பு ரஷியா 37 செயற்கைகோள்களுடன் மட்டுமே ராக்கெட்டை விண்ணில் ஏவியுள்ளது. ஒரேநேரத்தில் அதிக எண்ணிக்கையுடன் செயற்கைகோள்களை விண்ணிற்கு செலுத்திய இந்திய விஞ்ஞானிகளின் சாதனைக்கு புதுவை அரசு சார்பிலும், புதுவை மக்கள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த 2013–ம் ஆண்டு அக்டோபர் மாதம் செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோளை அனுப்பி வெற்றி கண்டோம். ஆனால் ஐரோப்பிய நாடுகள் 3, 4 முறை முயற்சித்து தோல்வியை தழுவி அதன்பிறகே செயற்கைகோளை செலுத்தி வெற்றிகண்டனர்.
முதல் இடம்ஆனால் நமது விஞ்ஞானிகள் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றுள்ளனர். அந்த செயற்கைகோள் தொடர்ந்து படங்களை அனுப்பி வருகிறது. ராக்கெட்டுகளை செலுத்துவதற்கான கிரையோஜெனிக் என்ஜினை நாம் ரஷியாவிடம் இருந்தே பெற்று வந்தோம். ஆனால் அந்த என்ஜினை தற்போது நமது விஞ்ஞானிகளே தயாரித்து விண்ணில் ஏவுகின்றனர்.
இதுபோன்ற சாதனைகளை பாராட்டுகிறேன். விண்வெளித்துறையில் உலக அளவில் இதற்கு முன் இந்தியா 4–வது இடத்தில் இருந்தது. தப்போது முதல் இடத்துக்கு வந்துள்ளது. நமது விஞ்ஞானிகள் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறார்கள். நான் ஏற்கனவே அந்த துறையின் மந்திரியாக இருந்தவன் என்பதால் இஸ்ரோ விஞ்ஞானி கிரண்குமாருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.