திருச்செந்தூரில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சி மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தகவல்
வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளது.
தூத்துக்குடி,
வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி உள்ளதாவது;–
இலவச பயிற்சிதமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலான மதிப்பீட்டில் வேலை வாய்ப்பை பெற்று தர, இலவச திறன் எய்தும் பயிற்சி, திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், வெல்டர் தொழிற்பிரிவிற்கு நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் (மார்ச்) 10–ந்தேதி முதல் தொடங்குகிறது.
விண்ணப்பம்இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் பயனாளிகளுக்கு போக்குவரத்து செலவுக்காக நாள் ஒன்றுக்கு ரூ.100 வழங்கப்படும். இந்த தொகை, பயிற்சியில் 85 சதவீதம் வருகையளித்த பயிற்சியாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
திறன் எய்தும் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கான விண்ணப்பத்தை வருகிற 28–ந்தேதி முதல் திருச்செந்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பெற்று கொள்ளலாம், என அவர் தெரிவித்துள்ளார்.