மேடவாக்கத்தில் கடையில் பணம் திருடிய வாலிபர் கைது
பால் பாக்கெட் வாங்குவது போல் வந்த வாலிபர் ஒருவர், திடீரென கல்லாவில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை திருடி விட்டு தப்பி ஓடினார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த மேடவாக்கம் பகுதியில் பால் கடை நடத்தி வருபவர் சின்னதுரை(வயது 47). இவரது கடைக்கு பால் பாக்கெட் வாங்குவது போல் வந்த வாலிபர் ஒருவர், திடீரென கல்லாவில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை திருடி விட்டு தப்பி ஓடினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னதுரை கூச்சலிட்டார். இதை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து பள்ளிக்கரணை போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர், நன்மங்கலம் பகுதியை சேர்ந்த ரமேஷ்(29) என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story