செம்மஞ்சேரியில் 30 குடிசைகள் எரிந்து சாம்பல்


செம்மஞ்சேரியில் 30 குடிசைகள் எரிந்து சாம்பல்
x
தினத்தந்தி 17 Feb 2017 2:05 AM IST (Updated: 17 Feb 2017 2:05 AM IST)
t-max-icont-min-icon

செம்மஞ்சேரியில் 30 குடிசைகள் எரிந்து சாம்பல் ஆனது.

சோழிங்கநல்லூர்,

செம்மஞ்சேரியில் 30 குடிசைகள் எரிந்து சாம்பல் ஆனது.

தீ பரவியது

சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி பாண்டிச்சேரிபாட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய தம்பி புருஷோத். இவர்கள் இருவருடைய இடத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிசைகளில் ஆந்திரா மற்றும் ஒடிசா உள்ளிட்ட வெளிமாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் தங்கி இருந்தனர். நேற்று முன்தினம் ஒரு குடிசையில் ஏற்பட்ட தீ மளமளவென மற்ற குடிசைகளுக்கும் பரவியது.

இதையடுத்து குடிசைகளுக்குள் தூங்கி கொண்டிருந்தவர்கள் தங்கள் குழந்தைகளுடன் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். பின்னர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

30 குடிசைகள்

சிறுசேரி, துரைப்பாக்கம், திருவான்மியூரில் இருந்து தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 30 குடிசைகள் எரிந்து சாம்பல் ஆனது. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story