தமிழ்நாட்டு மக்களுக்கு ஊழலற்ற தூய்மையான ஆட்சி அதிகாரம் தேவை
தமிழ்நாட்டு மக்களுக்கு ஊழலற்ற தூய்மையான ஆட்சி அதிகாரம் தேவை என பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பவானி,
பொதுக்கூட்டம்
ஈரோடு மாவட்டம் பவானியில் பாரதீய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் கே.ஏ.சித்திவிநாயகம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செந்தில் பாலசுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் என்.ஆர்.பழனிச்சாமி, மாவட்ட முன்னாள் தலைவர் இமயம் சந்திரசேகர், நகர பொறுப்பாளர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தூய்மையான ஆட்சி அதிகாரம்
தமிழகத்தில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். தமிழக மக்களுக்காக ஒரு ஊழலற்ற தூய்மையான ஆட்சி அதிகாரம் தேவை. இதற்காக பா.ஜ.க. சார்பில் மாவட்டம் தோறும் கட்சி தொண்டர்களை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் முதன் முதலாக இந்த ஆலோசனை கூட்டம் நடந்து உள்ளது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்தும், வெற்றி வாய்ப்புகள் குறித்தும் கட்சி தொண்டர்களின் கருத்துகள் கேட்கப்பட்டது.
பொதுவாழ்வில் தூய்மை, அரசியலில் நேர்மை என்பதை தாரக மந்திரமாக கொண்டு 3 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு வெற்றி நடை போட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டதால்தான் ஜல்லிக்கட்டுக்கு சட்டம் நிறைவேற்றப்பட்டு தீர்வு காணப்பட்டு உள்ளது.
ஊழல் கட்சிகளுடன்...
பா.ஜ.க. மீது தமிழக மக்கள் நம்பிக்கை வைத்து உள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் பா.ஜ.க. நன்றாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஊழல் கட்சிகளுடன் பா.ஜ.க. தேர்தல் கூட்டணி வைக்காது.
மேற்கண்டவாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
இதில் மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் மோகன்குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பற்குணன், செந்தில்குமார், பொறுப்பாளர் சரவணன், கோட்ட இணை பொறுப்பாளர் பாயிண்ட் மணி, பொருளாதாரப்பிரிவு அணி மாவட்ட தலைவர் டி.எம்.ஆர். செல்வம் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பவானி நகர தலைவர் கே.கண்ணன் வரவேற்று பேசினார். முடிவில் மகளிர் அணி மாவட்ட தலைவி வித்யா ரமேஷ் நன்றி கூறினார்.

Next Story