சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நவீன பெட்டிகள் இணைத்து இயக்கம் பயணிகள் வரவேற்பு
சென்னை- திருச்சி இடையே இயக்கப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நவீன பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திருச்சி,
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில்
நீண்ட தூரம் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 24 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பெட்டிகளை விட சற்று அகலமாகவும், இருக்கைகள் நல்ல வசதியுடனும், ரெயில் ஓடும்போது அதிர்வுகள், சத்தம் ஏற்படாமல் இருக்கும் வகையில் நவீன பெட்டிகள் ரெயில்களில் இணைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழகத்தில் மதுரை-சென்னை இடையே இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், திருச்சி-சென்னை இடையே இயக்கப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் நவீன பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து அடுத்ததாக திருச்சி-சென்னை இடையே இயக்கப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நவீன பெட்டிகள் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னையில் இருந்து நேற்று காலை திருச்சிக்கு புறப்பட்ட சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் நவீன பெட்டிகளுடன் இணைக்கப்பட்டது. ரெயில் நேற்று மாலை 4.15 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தது.
பயணிகள் மகிழ்ச்சி
நவீன பெட்டிகள் இணைக்கப்பட்ட சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். புதிதாக இணைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் தூங்கும் வசதி பெட்டி 10-ம், முதல் வகுப்பு குளிர்சாதன வசதி பெட்டி ஒன்றும், 2 அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி 3-ம், மூன்றடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி 4-ம், முன்பதிவில்லா பெட்டிகள் 2-ம் என மொத்தம் 20 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. முன்பதிவில்லா பெட்டியில் ஒன்றில் மாற்றுத்திறனாளிகளுக்கு 50 இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு தனி பெட்டிகள் இணைப்பு இல்லை.
திருச்சியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நவீன பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நவீன பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Next Story