வறட்சி, தண்ணீர் பற்றாக்குறையால் சம்பா மகசூல் பெருமளவில் குறைந்தது
சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் வறட்சி, தண்ணீர் பற்றாக்குறையால் சம்பா மகசூலும் பெருமளவில் குறைந்துள்ளது. எக்டேருக்கு 1½ டன் அளவில் மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்,
நெற்களஞ்சியம்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறும். வழக்கமாக டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும், கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாததாலும் மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை. இதையடுத்து தாமதமாக கடந்த செப்டம்பர் மாதம் 20-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
சம்பா, தாளடி சாகுபடி
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணையை செப்டம்பர் 24-ந்தேதி காலை வந்தடைந்தது. இதையடுத்து கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை.
இதனால் சம்பா சாகுபடி அதிக அளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி 1 லட்சத்து 30 ஆயிரம் எக்டேரில் நடைபெறும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவு சாகுபடி நடைபெறவில்லை. 1 லட்சத்து 5 ஆயிரம் எக்டேரில் தான் சம்பா, தாளடி சாகுபடி நடை பெற்றது.
எந்திரங்கள் மூலம் அறுவடை
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையும் பொய்த்து விட்டது. மேலும் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் அணையும் மூடப்பட்டது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா, தாளடி பயிர்கள் கருகின. ஆழ்குழாய் கிணறு மூலம் சாகுபடி செய்யப்பட்ட இடங்களில் மட்டும் நெற்பயிர்கள் நன்கு வளர்ந்தன.
தற்போது சம்பா பயிர்கள் விளைந்து அறுவடை நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, அம்மாப்பேட்டை, பாபநாசம், கும்பகோணம், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பகுதிகளில் எந்திரங்கள் மூலம் அறுவடைபணிகள் நடைபெற்று வருகின்றன.
மகசூல் குறைந்தது
தற்போது மகசூல் பெருமளவில் குறைந்துள்ளது. வழக்கமாக சம்பா, தாளடி சாகுபடி செய்யும் போது எக்டேருக்கு 5 முதல் 5½ டன் வரை சராசரியாக மகசூல் இருக்கும். ஆனால் தற்போது எக்டேருக்கு 1½ டன் முதல் 2 டன் வரை மகசூல் கிடைத்து வருகிறது. சில இடங்களில் நெற்பயிர்கள் கருகி உள்ளதால் நெற்பயிர்கள் அனைத்தும் பதராக காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் அறுவடையே செய்ய வேண்டாம் என்ற நிலைக்கு வந்துள்ளனர். ஆழ்குழாய் கிணறு மூலம் சாகுபடி செய்யப்பட்ட இடங்களில் 3 முதல் 4 டன் வரை மகசூல் கிடைக்கிறது. வறட்சி, தண்ணீர் பற்றாக்குறையால் மகசூல் பெருமளவில் குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து தஞ்சை மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது வரை 25 ஆயிரம் எக்டேரில் சம்பா அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன. தற்போது எக்டேருக்கு 1½ டன் முதல் நன்றாக தண்ணீர் இருந்து விளைந்த இடங்களில் 4 டன் வரை மகசூல் கிடைத்துள்ளது”என்றார்.

Next Story