வெற்றிலையூரணி புதுகண்மாயில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிட கோரிக்கை


வெற்றிலையூரணி புதுகண்மாயில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிட கோரிக்கை
x
தினத்தந்தி 17 Feb 2017 4:00 AM IST (Updated: 17 Feb 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

வெற்றிலையூரணி புதுகண்மாயில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிட கோரிக்கை

தாயில்பட்டி,

ஐகோர்ட்டு உத்தரவினை தொடர்ந்து சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வெற்றிலையூரணி, தெற்கு ஆனைக்குட்டம் பகுதிகளில் பல இடங்களில் இன்னமும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படாமல் உள்ளன. இந்தப்பகுதி ராமநாதபுரம் மாவட்டத்துடன் இருந்த போது பெருந்தலைவர் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்டு புது கண்மாய் அமைக்கப்பட்டது. மாவட்டத்தின் மூன்றாவது பெரிய கண்மாயாக இது திகழ்கிறது. இந்த கண்மாயில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படாமல் உள்ளன. இதனை முழுவதுமாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு மராமத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story