அவினாசி அருகே கார்-மோட்டார்சைக்கிள் மோதல்; தொழிலாளி படுகாயம்

அவினாசி,
கோவை மாவட்டம் சூலூர் பதுவம்பள்ளியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் முருகேஷ் (வயது 20). விசைத்தறி தொழிலாளி. இவர் அவினாசி அருகே ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள மோட்டார்சைக்கிளில் அன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவினாசி அருகே வெள்ளியம்பாளையம் பிரிவை அடுத்த ஒரு திருப்பத்தில் சென்ற போது, அன்னூரில் இருந்து அவினாசி நோக்கி வந்த காரும், இவரது மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட முருகேஷ் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், விபத்தில் காரின் முன்பகுதியும், மோட்டார்சைக்கிளும் பலத்த சேதமடைந்தன. காரின் முன்பக்க டயரும் வெடித்தது. இந்த சம்பவம் குறித்து அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story