திருவாரூரில் அ.தி.மு.க.வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றதையொட்டி திருவாரூரில் அ.தி.மு.க.வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
திருவாரூர்,
இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி நேற்று பதவி ஏற்றதையொட்டி திருவாரூரில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் மணிகண்டன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முருகானந்தம், மாவட்ட பிரதிநிதி தன்ராஜ், கூட்டுறவு சங்க தலைவர் முத்துமாணிக்கம், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் முகமதுகஜ்ஜாலி, நிர்வாகிகள் சசி, சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல குடவாசல் பஸ் நிலையம் முன்பு ஒன்றிய, நகர அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் பாப்பா.சுப்பிரமணியன், நகர செயலாளர் சுவாமிநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாவட்ட பிரதிநிதிகள் சாகுல்அமீது, சேகர், நகர நிர்வாகிகள் முத்துச்செல்வம், முருகானந்தம், சிங்காரவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குடவாசல் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எரவாஞ்சேரியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய நிர்வாகிகள் ஏசுராஜன், ராமையன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கொரடாச்சேரி வெட்டாற்று பாலத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் சேகர், பாஸ்கர், நகர செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் நடராஜன், நகர செயலாளர் அன்பழகன் ஆகியோர் தலைமை தாங்கினர். பின்னர் அதேபகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெகன், நகர இளைஞர் அணி செயலாளர் ஞானசேகரன், கூட்டுறவு சங்க தலைவர் அம்பிகாபதி, முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் நாசர், நகர பொருளாளர் நடராஜன், நிர்வாகிகள் ராமநாதன், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story