மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
வடகாடு அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்பதல் அளித்ததை கண்டித்து நேற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடகாடு,
ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாட்டின் 31 இடங்களில் இயற்கை எரிவாயு (ஹைட்ரோகார்பன்) எடுப்பதற்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை கண்டித்தும் நெடுவாசலில் நேற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் விவசாயிகள் கூறுகையில், ஓஎன்ஜிசி நிறுவனம் எங்கள் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எரிவாயு எடுப்பதற்காக நிலம் கையகப்படுத்த முயற்சிகள் செய்தனர். விவசாயிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இயற்கை எரிவாயு சோதனை பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் நிறுத்தி வைத்தது. கடந்த ஆண்டு நெடுவாசல் கிராமத்தில் மேலும் சில இடங்களில் நிலங்களை கையகப்படுத்த அந்த நிறுவனம் முயன்றபோது விவசாயிகள் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் இப்பகுதி மக்களிடம் கருத்து கேட்காமல் மத்திய அரசு எரிவாயு திட்டத்துக்கு அனுமதி அளித்து உள்ளது.
வாழ்வாதாரம் பாதிக்கப்படும்
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும். விவசாயத்தையே அடிப்படையாக கொண்டுள்ள எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். இதனால் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் ஒன்றுகூடி இப்பகுதி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று திட்டத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளோம், என்று கூறினார்கள்.

Next Story