திறந்தவெளி கிணற்றினால் பள்ளி மாணவ-மாணவிகளின் உயிருக்கு ஆபத்து
குஜிலியம்பாறை அருகே திறந்தவெளி கிணற்றினால் பள்ளி மாணவ-மாணவிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
குஜிலியம்பாறை,
திறந்தவெளி கிணறு
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே மல்லப்புரம் ஊராட்சியில் கெஜிலிபொம்மன்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யும் வகையில் ஊரின் மையப்பகுதியில் கிணறு உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த கிணறு ஒன்று பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்தது.
ஆனால் தற்போது ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது அந்த கிணறு பயன்பாடு இன்றி காணப்படுகிறது. இதுமட்டுமின்றி திறந்தவெளியில் கிணறு உள்ளது. இதனால் கொசுக் களின் கூடாரமாக விளங்குகிறது. சுமார் 60 அடி ஆழம் உள்ள இந்த கிணற்றின் மேல் பகுதியில் கம்பி வலைகள் எதுவும் அமைக்கப்படவில்லை.
மாணவ-மாணவிகளுக்கு ஆபத்து
கிணற்றில் இருந்து சுமார் 30 அடி தூரத்தில் தான் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு பயிலும் மாணவ-மாணவிகள், கிணற்றில் தவறி விழுந்து உயிரிழக் கும் ஆபத்து உள்ளது. ஏனெனில் மதிய உணவு சாப்பிடும் மாணவ-மாணவிகள் கிணறு அருகே உள்ள குழாய்க்கு சென்று பாத்திரங்களை கழுவுகின்றனர்.
விளையாட்டு பாடவேளையிலும் குழந்தைகள் அந்த கிணற்றை சுற்றி தான் விளையாடுகிறார்கள். ஆபத்து நிறைந்த இந்த கிணறுக்கு சுற்றுச்சுவர் மட்டுமே உள்ளது. ஆனால் மேல் பகுதியில் கம்பி வலையை கொண்டு மூடப்படாததால் அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கிணற்றை எட்டி பார்க்கின்றனர். மேலும் சுற்றுச்சுவரில் உட்கார்ந்து பேசுவதையும் பார்க்க முடிகிறது. எனவே பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு திறந்தவெளி கிணற்றுக்கு கம்பி வலை அல்லது மூடி அமைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story