‘காதல் திருமணம் செய்த மகன், மருமகள் உயிருக்கு ஆபத்து’ போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
காதல் திருமணம் செய்த மகன், மருமகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக போலீஸ்காரரின் தாய் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தார்.
கடலூர்,
போலீஸ்காரரின் தாய் மனு
கடலூர் குண்டுஉப்பலவாடி பெரியசாமி நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவருடைய மனைவி பிச்சையம்மாள் (வயது 62). இவர் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் வக்கீல் திருமார்பன், நகர செயலாளர் செந்தில், வக்கீல்கள் திருமேனி, அறவாழி, பாபு, ஜெயபிரகாஷ், சதீஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரை சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
போலீஸ்காரர்
என்னுடைய கணவர் கோவிந்தராஜன் காவல்துறையில் பணியாற்றியபோது இறந்ததால் கருணை அடிப்படையில் எனக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது. நான் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டேன். எனக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் இளையமகன் வினோத் என்கிற வினோத்குமார் (வயது 35) கம்மாபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 1-ந்தேதி என்னுடைய உறவினர் இல்ல திருமண விழாவுக்கு சிதம்பரம் சென்று விட்டு எங்கள் தெரு வழியாக நடந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய மகனை சிலர் மிரட்டிக்கொண்டிருந்தனர். அதைத்தொடர்ந்து நான் வீட்டில் சென்று பார்த்தபோது, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. இது பற்றி நான் ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்தேன். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் குற்றவாளிகளை கைது செய்யவில்லை.
உயிருக்கு ஆபத்து
பின்னர் இது தொடர்பாக நாங்கள் விசாரித்தபோது தான், வினோத்குமாரும், சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் கடலூர் மஞ்சக்குப்பம் நேருநகரை சேர்ந்த கார்த்திகேயன் மகளும், கல்லூரி மாணவியுமான நந்தினியும் (19) காதலித்து வந்ததும், கடந்த 23-1-2017 அன்று இருவரும் திருமணம் செய்ததும், திருமணத்தை 31-1-2017 அன்று வேப்பூர் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ததும் தெரிய வந்தது. இதை அறிந்த நந்தினியின் சகோதரர்கள் தான் எங்கள் வீட்டில் உள்ள பொருட்களை சூறையாடியது தெரிந்தது.
இதற்கிடையில் என்னுடைய மருமகள் நந்தினியை வலுக்கட்டாயமாக அவரது பெற்றோர் அழைத்து சென்று, துன்புறுத்தி வருகின்றனர். இதனால் என்னுடைய மகன் உயிருக்கும், மருமகள் நந்தினி உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஆகவே என்னுடைய மருமகளை மீட்டு, எனது மகனுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் போலீஸ்காரர் வினோத்குமார் தாய் பிச்சையம்மாள் குறிப்பிட்டுள்ளார்.
பரபரப்பு
ஏற்கனவே வினோத்குமார் நந்தினியை கடத்திச்சென்றதாக கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் தன்னை யாரும் கடத்தவில்லை என்று போலீஸ் நிலையத்தில் ஆஜராகி நந்தினி வாக்குமூலம் அளித்ததாகவும், பின்னர் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட அவர், எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்து விட்டு பெற்றோரிடம் சென்றதாகவும் போலீசார் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையில் அனுமதியின்றி விடுமுறை எடுத்த போலீஸ்காரர் வினோத்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் போலீஸ்காரரின் தாய், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story