மேட்டூர் அணை நீர்மட்டம் 32.81 அடியாக குறைந்தது
மேட்டூர் அணை நீர்மட்டம் 32.81 அடியாக குறைந்துள்ளது. இந்த நிலையில் 16 கண் மதகுகள் பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மேட்டூர்,
நீர்மட்டம் குறைந்தது
கடந்த ஆண்டு பருவமழை தவறியதால் தமிழகத்தில் மழை பொழிவு மிகவும் குறைவாகவே இருந்தது. இதனால் மேட்டூர் அணை உள்பட பல்வேறு அணைகளுக்கு போதுமான நீர்வரத்து இல்லாத நிலை நீடித்து வருகிறது. மழை காலங்களிலேயே நீர்வரத்து குறைந்த நிலையில் தற்போது கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது.
இதில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்து வினாடிக்கு 60 கனஅடிக்கு கீழ் வருகிறது. நேற்று வினாடிக்கு 45 கனஅடி வீதமே வந்தது. இதன் காரணமாக அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 450 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இருப்பினும் அணைக்கு நீர்வரத்து தண்ணீர் திறப்பைவிட பலமடங்கு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது. அதாவது, நேற்று முன்தினம் 32.91 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 32.81 அடியாக குறைந்துள்ளது.
கோடையின் தாக்கத்தை சமாளிக்குமா?
இதன் எதிரொலியாக சுரங்க மின்நிலையம் வழியாக தண்ணீர் திறந்துவிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதேபோன்று 16 கண் பாலம் அருகே அணையின் உட்பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள சேலம் மாநகராட்சி நீரேற்று நிலையத்தில் மிதவை மோட்டார்கள் பொருத்தி தண்ணீர் எடுக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் இந்த ஆண்டு கோடையின் தாக்கத்தை மேட்டூர் அணையில் உள்ள நீர்இருப்பு சமாளிக்குமா? என்ற ஐயப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே, காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலத்தில் மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட அம்மாநில அரசு நிதி ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் கிடைக்க வாய்ப்பு இல்லை என விவசாயிகள் கூறி வருகின்றனர். எனவே, மேட்டூர் அணையை நம்பி உள்ள மாவட்டங்களில் குடிநீர் தேவைக்கு தண்ணீர் கிடைக்குமா? என கேள்வியும் எழுந்துள்ளது.
கான்கிரீட் தளம் அமைக்கும் பணி
இந்த நிலையில் மேட்டூர் அணை புனரமைப்பு திட்டத்தின்கீழ் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறும் பாதையில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. கரடுமுரடான பாறைகள் இடையே கான்கிரீட் கலவை கொட்டப்பட்டு தளம் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story