தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற ஆயுதப்படை போலீசாருக்கு பரிசு

நாகர்கோவில்,
குமரி மாவட்ட ஆயுதப்படை போலீசாருக்கான நினைவூட்டல் கவாத்து விளையாட்டு போட்டிகள் கடந்த மாதம் 11–ந் தேதி தொடங்கி பல கட்டங்களாக நடந்தது. மாவட்ட ஆயுதப்படை சார்பில் நடத்தப்பட்ட இப்போட்டியில் கைப்பந்து, நீச்சல், குண்டு எறிதல், எறிபந்து, ஓட்டப்பந்தயம், மாரத்தான் உள்பட பல்வேறு தடகள போட்டிகளில் போலீசார் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டிகள் ஆண்கள், பெண்கள் என பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதைதொடர்ந்து, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற போலீசாருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு தண்டீஸ்வரன், மாவட்ட குற்ற ஆவண காப்பக போலீஸ் துணை சூப்பிரண்டு மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், ஒவ்வொரு விளையாட்டு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். மொத்தம் 156 பேர் பரிசுகளை வென்றனர்.
இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்–இன்ஸ்பெக்டர்கள் செல்லசாமி, சுரேஷ்குமார், அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story