அம்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு


அம்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 17 Feb 2017 3:10 AM IST (Updated: 17 Feb 2017 3:10 AM IST)
t-max-icont-min-icon

அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆயிரம்காத்தான்(வயது 57).

ஆவடி,

அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆயிரம்காத்தான்(வயது 57). இவர், கொரட்டூரில் தனியாக கம்பெனி வைத்து உள்ளார். இவருடைய மனைவி மாலா.

நேற்றுமுன்தினம் மாலை ஆயிரம்காத்தான், வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று விட்டார். இரவில் வீட்டுக்கு திரும்பி வந்த போது, வீட்டின் பின்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்று இருப்பது தெரிந்தது. இதுபற்றி அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story