வெங்காயம் விலை வீழ்ச்சிக்கு விவசாயிகளுக்கு எதிரான அரசின் கொள்கையே காரணம் சுப்ரியா சுலே எம்.பி. குற்றச்சாட்டு
நாசிக் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலையொட்டி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
நாசிக்,
நாசிக் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலையொட்டி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து யோலா, அத்காவ் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
அப்போது, வெங்காய விலை வீழ்ச்சிக்கு எதிராக குரல் கொடுத்த அவர், ‘‘மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான கொள்கையால் தான் வெங்காயம் விலை சரிவடைந்து விட்டதாக குற்றம்சாட்டினார். இதனால், விவசாயிகளின் முதுகெலும்பு உடைந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டது பற்றி கருத்து கூறிய சுப்ரியா சுலே, ‘‘மோடி அரசு 2014–ம் ஆண்டு ஓட்டு வாங்கியது. 2017–ம் ஆண்டு நோட்டு (ரூபாய்) வாங்கியது’’ என்று விமர்சித்தார்.
Next Story