சுற்றுலா வந்த பாலிடெக்னிக் மாணவர் மெரினா கடலில் மூழ்கி பலி


சுற்றுலா வந்த பாலிடெக்னிக் மாணவர் மெரினா கடலில் மூழ்கி பலி
x
தினத்தந்தி 17 Feb 2017 4:33 AM IST (Updated: 17 Feb 2017 4:33 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரியில் இருந்து சுற்றுலா வந்த பாலிடெக் னிக் மாணவர் மெரினா கடலில் மூழ்கி பலியானார்.

சென்னை,

கல்லூரியில் இருந்து சுற்றுலா வந்த பாலிடெக் னிக் மாணவர் மெரினா கடலில் மூழ்கி பலியானார். அதேபோல் ராட்சத அலையில் சிக்கி 4 பேர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.

சுற்றுலா

வேலூரை சேர்ந்தவர் நிஷோக் ஆனந்த் (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் அந்த கல்லூரியில் இருந்து 22 மாணவிகள் உள்பட 68 மாணவர்கள் சென்னைக்கு சுற்றுலா வந்தனர். நேற்று காலை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தை சுற்றி பார்த்துவிட்டு மெரினா கடலை சுற்றி பார்க்க வந்தனர்.

அப்போது, மெரினா காந்தி சிலையின் பின்புறம் உள்ள கடலில் மாணவர்கள் இறங்கி ஆனந்த குளியல் போட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத அலையில் சிக்கி மாணவர் நிஷோக் ஆனந்த் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார்.

சாவு

இதைப்பார்த்த கடலோர காவல் படையினர் அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே நிஷோக் ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், நேற்று மாலை குடிசை மாற்றுவாரியத்திற்கு எதிரே உள்ள கடல் பகுதியில் குளித்து கொண்டிருந்த 4 பேரை ராட்சத அலை கடலுக்குள் இழுத்து சென்றது. அப்போது அந்த வழியாக ரோந்து வந்த கடலோர காவல் படையினர் அவர்களை காப்பாற்றி சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story