நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 23–ந் தேதி நடக்கிறது

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 23–ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 18 Feb 2017 1:00 AM IST (Updated: 17 Feb 2017 11:48 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் உள்ள கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 23–ந் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.

நெல்லை,

நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

நெல்லை மாவட்டத்தில் உள்ள கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 23–ந் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.

சிலிண்டர் பதிவு செய்வதில் மெத்தனப்போக்கு, முறைகேடுகள், சிலிண்டர் வழங்குவதில் காலதாமதம் குறித்து வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை கூட்டத்தில் தெரிவிக்கலாம். அனைத்து எண்ணெய் நிறுவன முகவர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேலு தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் கியாஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story