தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(சனிக்கிழமை) மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(சனிக்கிழமை) மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில்..தூத்துக்குடி மாவட்டத்தில் மஞ்சள்நீர்காயல், ஸ்ரீவைகுண்டம், குளத்தூர், நாகலாபுரம், சூரங்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. எனவே, இந்த துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படும், என ஊரக மின் வினியோக செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார் தெரிவித்து உள்ளார்.
வேம்பார்– பருவக்குடி சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்காக, கோவில்பட்டி புதுரோடு பகுதியில் சாலையோரம் உள்ள மின்கம்பங்களை இடமாற்றம் செய்யும் பணி மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே, இந்த பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும். ஓட்டப்பிடாரம் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. எனவே இந்த துணைமின் நிலைய பகுதிகளில் இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
முத்தையாபுரம் பகுதியில்...முத்தையாபுரம் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், அங்கு இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும், என தூத்துக்குடி நகர் மின்வினியோக செயற்பொறியாளர் தென்னரசு மற்றும் முத்தையாபுரம் துணை மின் நிலைய செயற்பொறியாளர் சாமுவேல் சுந்தர்ராஜ் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.
சாத்தான்குளம் பகுதியில்...சாத்தான்குளம், நாசரேத், செம்மறிக்குளம், மூலைக்கரைப்பட்டி, பழனியப்பபுரம், நடுவக்குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. எனவே, அங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும், என திருச்செந்தூர் மின் வினியோக செயற்பொறியாளர் பிரபாகர் தெரிவித்து உள்ளார்.