பொன்னேரியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு


பொன்னேரியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 18 Feb 2017 1:14 AM IST (Updated: 18 Feb 2017 1:14 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் குணாளன் (வயது 42). இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலை செய்து வருகிறார்.

பொன்னேரி,

பொன்னேரி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் குணாளன் (வயது 42). இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உஷாராணி (36). நேற்று காலை கணவன், மனைவி இருவரும் ஆண்டார்குப்பம் கிராமத்தில் நடந்த உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தனர். பின்னர் குணாளன் வேலைக்கு சென்று விட்டார்.

திருமணத்திற்கு சென்று விட்டு வந்த உஷாராணி நகைகளை கழற்றி பீரோவில் வைத்து வீட்டை பூட்டிக்கொண்டு பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் பேசி கொண்டிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் மற்றும் ¼ கிலோ வெள்ளி பொருட்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டிருந்தது. இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story