மணல் கடத்தல்; 6 பேர் கைது


மணல் கடத்தல்; 6 பேர் கைது
x
தினத்தந்தி 18 Feb 2017 1:27 AM IST (Updated: 18 Feb 2017 1:27 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம்,

மணல் கடத்தல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மணல் கடத்தல்

காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம், தாயார் குளம் பகுதிகளில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக பெரிய காஞ்சீபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது அங்கு செவிலிமேடு பகுதியை சேர்ந்த சம்பத் (வயது 44), அரசப்பன் (58) ஆகியோர் மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

சின்னையன்குளம் ஜங்சன் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதனுக்கு புகார்கள் வந்தது. உடனடியாக அவர் போலீசாருடன் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு மணல் கடத்தலில் ஈடுபட்ட காஞ்சீபுரம் தும்பவனம் பகுதியை சேர்ந்த பாலசுந்தரத்தை போலீசார் கைது செய்தனர்.

ஒழுகரை

மேலும் உத்திரமேரூரை அடுத்த ஒழுகரை கிராமத்தில் மணல் கடத்தப்படுவதாக உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷுக்கு புகார்கள் வந்தது. அதையொட்டி அவர் போலீசாருடன் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மாட்டு வண்டிகளில் மணல் கடத்தியது தெரியவந்தது.

இதையொட்டி உத்திரமேரூரை அடுத்த மருதம் கிராமத்தை சேர்ந்த ராஜா (27), மணல்மேடு பகுதியை சேர்ந்த ஸ்ரீராமன் (36), கடம்பர்கோவில் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (55) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Next Story