குடிநீர் வசதி செய்துதரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகை


குடிநீர் வசதி செய்துதரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 18 Feb 2017 3:30 AM IST (Updated: 18 Feb 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வசதி செய்துதரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.

குடிநீர் தட்டுப்பாடு

கோபி அருகே உள்ள கோட்டுபுள்ளாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது புதுக்காலனி. இந்த பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பி குழாய் வழியாக வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த பலநாட்களாக குழாய் வழியாக குடிநீர் வினியோகிக்கவில்லை என்று தெரியவருகிறது. இதனால் கிராமமக்கள் தோட்டத்து கிணறுகளுக்கு சென்று தண்ணீர் இரைத்து வந்தார்கள். கிணறுகளிலும் நாளடைவில் தண்ணீர் வற்றியதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அவதிப்பட்டார்கள். இதுகுறித்து கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகளுக்கும் கிராமக்கள் கோரிக்கை மனுகொடுத்தார்கள். ஆனால் குடிநீர் வசதி செய்துதரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

முற்றுகை

இந்தநிலையில் நேற்று காலை புதுக்காலனி பகுதியை சேர்ந்த ஆண்கள்-பெண்கள் என 50 பேர், உடனே குடிநீர் வசதி செய்துதரக்கோரி கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள். பின்னர் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் குடிநீர் வசதி வேண்டும் என்று கோரிக்கை மனுகொடுத்தார்கள்.

மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அதிகாரி விரைவில் புதுக்காலனி பகுதிக்கு குடிநீர் வசதி செய்துகொடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதை ஏற்றுக்கொண்டு கிராமமக்கள் கலைந்து சென்றார்கள். 

Next Story