அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூபே ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுகின்றன: மாவட்ட கண்காணிப்பாளர் தகவல்
அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்தி ருப்பவர்களுக்கு ரூபே ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுகின்றன என்று கரூர் மாவட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் ராமலிங்கம் கூறினார்.
சேமிப்பு
கரூர் மாவட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் ராமலிங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்திய அஞ்சல்துறை கடந்த 160 ஆண்டுகளாக பலவித சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதில் சிறு சேமிப்பும் ஒரு அங்கமாகும். அஞ்சலக சிறு சேமிப்பு பிரிவில் பலவித சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இந்த சேவைகளை நவீன வசதியுடன் பொதுமக்களுக்கு வழங்க ஒருங்கிணைக்கப்பட்ட சேமிப்பு வங்கி செயல்பட்டு வருவதுடன் தற்போது ரூபே ஏ.டி.எம். கார்டும் அஞ்சலகங்களில், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதை அனைத்து வங்கி ஏ.டி.எம்.களிலும் பயன்படுத்தலாம். இதற்கென தனியாக சேவை கட்டணம் ஏதுமில்லை.
ஏ.டி.எம். கார்டு
அஞ்சலகங்களில் தொடர் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் முதிர்வு தொகை பெற பாஸ் புத்தகத்தையும், அதற்கான விண்ணப்பத்தையும் முதிர்வு தேதிக்கு முன்னதாகவே கொடுத்தால், முதிர்வு தொகை சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்பட்டு ஒரு குறுஞ்செய்தி, சேமிப்புதாரருக்கு அனுப்பப்படும். சேமிப்புதாரர் தொகையினை அவரது வசதிக்கு ஏற்ப ஏ.டி.எம். கார்டு மூலம் எடுத்துக் கொள்ளலாம்.
எனவே சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். கார்டு பெறுவதற்கான விண்ணப்பத்தை அஞ்சலகங்களில் சமர்ப்பித்து ஏ.டி.எம் கார்டு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.
பதிவு
அஞ்சலகங்களில் தற்போது சேமிப்பு கணக்குகளில் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்கள் இணைக்கப்பட்டு வருகிறது. கரூர் கோட்டத்தில் நடைமுறையில் உள்ள 3 லட்சத்து 53 ஆயிரத்து 753 சேமிப்பு கணக்குகளில் இதுவரை 60 ஆயிரத்து 125 கணக்குகளில் மட்டுமே ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்கள் இணைக்கப்பட்டுள்ளது. எனவே அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்குகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி தங்களது ஆதார் எண், தொலைபேசி எண் மற்றும் வருமான வரி கணக்கு எண்களை தங்களது சேமிப்பு கணக்கில் பதிவு செய்து அஞ்சலகத்தின் விரைவான சேவையை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story