பஸ் நிலையங்களில் விரைவில் இலவச வை–பை சேவை அறிமுகம் பெஸ்ட் போக்குவரத்து கழகம் திட்டம்

பஸ் நிலையங்களில் விரைவில் இலவச வை–பை சேவை அறிமுகம் பெஸ்ட் போக்குவரத்து கழகம் திட்டம்
x
தினத்தந்தி 18 Feb 2017 3:09 AM IST (Updated: 18 Feb 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

பஸ் நிலையங்களில் விரைவில் இலவச வை–பை சேவை அறிமுகம் செய்ய பெஸ்ட் போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

மும்பை,

பஸ் நிலையங்களில் விரைவில் இலவச வை–பை சேவை அறிமுகம் செய்ய பெஸ்ட் போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

இலவச வை–பை வசதி

மும்பை மாநகராட்சியின் கீழ் பெஸ்ட் போக்குவரத்து கழகம் தற்போது நஷ்டத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பஸ் நிலையங்களில் இலவச வை–பை வசதியை வழங்கி பயணிகளை கவர பெஸ்ட் போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெஸ்ட் பஸ்நிலையங்களில் 4 ஆயிரத்து 15 வை–பை ரவுட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. இந்த திட்டம் தொடங்கப்பட்டால் சுமார் 30 லட்சம் பெஸ்ட் பயணிகள் பயனடைவார்கள்.

அடுத்த மாதம் அறிமுகம்

தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. எனவே இந்த திட்டம் நிலைகுழுவின் ஒப்புதலுக்காக காத்து உள்ளது. இதுகுறித்து பெஸ்ட் கழக பொதுச்செயலாளர் ஜெகதிஷ் பாட்டீல் கூறும்போது, ‘‘ முதல் கட்டமாக இந்த திட்டத்தின் மூலம் அடுத்த மாதம் 100 பஸ்களில் இலவச வை–பை வசதி அறிமுகம் செய்யப்படும்’’ என்றார்.

Next Story