உடையார்பாளையம் பேரூராட்சி பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி


உடையார்பாளையம் பேரூராட்சி பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி
x
தினத்தந்தி 18 Feb 2017 10:30 PM GMT (Updated: 2017-02-19T03:23:30+05:30)

உடையார்பாளையம் பேரூராட்சி பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி

உடையார்பாளையம்,

உடையார்பாளையம் பேரூராட்சி பகுதியில் உள்ள ஏரி, குளம், மயான பகுதி ஆகிய இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடந்தது. இதனையடுத்து நேற்று அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் சாலை, 3-வது பட்டத்து மாரியம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் சீமைக்கருவேல மரங்களை பொக்ளின் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்தது. இந்த பணியை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் டீனாகுமாரி, நிர்வாக அலுவலர் பாலமுருகன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலரழகன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உடையார்பாளையம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் இடத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்களை தாங்களாகவே அகற்றி பேரூராட்சிக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். தவறும் பட்சத்தில் பேரூராட்சி மூலமாக தங்களது இடத்தில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படும். அதற்கான செலவு தொகையை இருமடங்காக பேரூராட்சி மூலம் வசூலிக்கப்படும் என்று கூறினர். 

Next Story