அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைத்து செல்கிற கட்சி பா.ம.க. டாக்டர் ராமதாஸ் பேச்சு
அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைத்து செல்கிற கட்சி பா.ம.க. என்று ராணிப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
பொதுக்குழு கூட்டம்
வேலூர் ஒருங்கிணைந்த கிழக்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் ராணிப்பேட்டையில் நேற்று காலை நடந்தது. வேலூர் வடக்கு மாவட்ட தலைவர் ஆறுமுக முதலியார் தலைமை தாங்கினார். வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அ.ம.கிருஷ்ணன், மாவட்ட அமைப்பு செயலாளர்கள் தங்கதுரை, கார்த்திக்ராஜா உள்பட மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் கரிகாலன் வரவேற்றார்.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:–
தர்ம யுத்தம்
ராமாயணம், மகாபாரதம் படித்திருக்கின்றோம். துரோக செயல்களை செய்தவர்களுக்கு எதிராக இந்த இரண்டிலும் தர்மயுத்தம் நடைபெற்று இருக்கிறது. இப்போது ஊழலை எதிர்த்தும், ஊழலை ஒழிக்கவும், ஜனநாயகத்தை காத்திடவும் தர்ம யுத்தம் செய்ய வேண்டும். இறுதியில் தர்மம் வெல்ல போகிறது. நாம் வெல்ல போகிறோம்.
இன்றைக்கு பா.ம.க.வை இளைஞர்கள் இடத்தில் கொடுத்திருக்கின்றோம். ஒவ்வொரு ஊரிலும் பெண்கள் ஓட்டுதான் அதிகம் உள்ளது. பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணிக்கு ஆற்றல், திறமை என அனைத்து தகுதிகளும் இருக்கிறது.
இந்தியாவிலேயே கருப்பு மாவட்டம் என்று அழைக்கப்படுகிற மாவட்டம் வேலூர் மாவட்டம். தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலால் பாலாறு பாழாகியுள்ளது. நிலத்தடி நீர், காற்று ஆகியவை மாசடைந்துள்ளது.
பூட்டு போடும் போராட்டம்
வருகிற மார்ச் 31–ந் தேதி மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெறும். சோறு போடும் உழவனை கடவுள் என்று கூறியவர் அன்புமணி. பா.ம.க.வை சாதிக்கட்சி என்று கூறுகிறார்கள். அனைத்து சமுதாயத்தினருக்கும் பொறுப்புகளை கொடுத்து அரவணைத்து செல்கிற கட்சி பா.ம.க.
இங்கு இப்போது இருக்கிற எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து விட்டு தேர்தல் வைத்தால் கூட ராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதிகளில் பா.ம.க. அமோக வெற்றி பெறும். தமிழ்நாடு கவர்னர் ஊழலுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார்.
உண்மையான இதய தெய்வம் உங்களை பெற்றவர்கள் தான். எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது. விரைவில் பா.ம.க. ஆட்சியை பிடிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஆர்.வேலு, மாநில துணை பொதுச்செயலாளர் வக்கீல் சரவணன், முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் எம்.கே.முரளி, முன்னாள் எம்.எல்.ஏ, கே.எல்.இளவழகன், மாநில துணைத்தலைவர் ஏ.கே.நடராஜன், முன்னாள் எம்.பி. தனராஜ், மாநில சமூக நீதி பேரவை துணை செயலாளர் வக்கீல் ஜானகிராமன், மாநில இளைஞர் சங்க துணைத்தலைவர் சபரிகிரீசன், வன்னியர் சங்க மாவட்ட இளைஞர் அணி செயலாளர் எம்.எஸ்.மோகன்தாஸ், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி தலைவர் பகவான் கார்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவப்பிரகாசம், மாவட்ட பொறுப்பாளர் பி.எம்.சண்முகம், மாவட்ட துணைத்தலைவர் வேலு, மாவட்ட துணை செயலாளர் சுரேஷ், முன்னாள் ஆற்காடு நகர செயலாளர் ஏவிடி.பாலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் திருமுருகன், ஆற்காடு நகர செயலாளர் விஜயகுமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் பூண்டி மோகன், வாலாஜா ஒன்றிய செயலாளர் ரஜினிகுமார், வாலாஜா நகர செயலாளர் ஞானசேகர், மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர், மாவட்ட பொருளாளர் உமா மகேஸ்வரி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மகளிர் அணி பொறுப்பாளர் தனலட்சுமி நன்றி கூறினார்.

Next Story