கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்த விவசாயிக்கு 2 ஆண்டுகள் சிறை


கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்த விவசாயிக்கு 2 ஆண்டுகள் சிறை
x
தினத்தந்தி 24 Feb 2017 1:50 AM IST (Updated: 24 Feb 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா ஹனூர் அருகே பி.ஜி.பாளையா கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார்.

கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா ஹனூர் அருகே பி.ஜி.பாளையா கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார். விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் கஞ்சா செடியை பயிரிட்டு வளர்த்து வருவதாக ஹனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மோகன்குமாரில் தோட்டத்தில் சோதனை நடத்தியபோது அவர் இஞ்சி செடிகளுக்கு இடையே ஊடுபயிராக கஞ்சா செடியை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மோகன்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2015–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது.

இதுதொடர்பாக அவர் மீது சாம்ராஜ்நகர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று முன்தினம் நீதிபதி லட்சுமண் எப்.மலவள்ளி தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட மோகன்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


Next Story