காஞ்சீபுரத்தில் ரவுடி ஸ்ரீதர், சகோதரர் வீடுகள் ஜப்தி சென்னை அமலாக்கப்பிரிவு நடவடிக்கை
காஞ்சீபுரத்தில் பிரபல ரவுடி ஸ்ரீதர் மற்றும் அவரது சகோதரர் செந்தில் ஆகியோரது வீடுகளை ஜப்தி செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது.
சென்னை,
பிரபல ரவுடி
காஞ்சீபுரம் திருப்பருத்திகுன்றத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். ரவுடியான இவர் சாராய வியாபாரியும் ஆவார். இவர் மீது காஞ்சீபுரம் போலீசில் கொலை, கொலை முயற்சி, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் இவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் கோர்ட்டு பலமுறை அவரை ஆஜராக சம்மன் வழங்கியும் ஆஜராகாததால் அவரை பிரகனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவித்தது.
தற்போது ரவுடி ஸ்ரீதர் வெளிநாட்டில் மறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் 12-ந்தேதி காஞ்சீபுரம் காமராஜர் வீதியில் பஸ் நிலையத்திற்கு எதிரில் உள்ள 12 ஆயிரத்து 945 சதுர அடி கொண்ட சுமார் ரூ.30 கோடி மதிப்புள்ள சொத்துகளை பிரபல ரவுடி ஸ்ரீதர் வாங்கி சென்னை பிரபல தனியார் துணிக்கடைக்கு விற்றுள்ளதாக, சென்னை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வந்து அந்த இடத்திற்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டி நடவடிக்கை மேற்கொண்டனர்.
வீடுகள் ஜப்தி
இந்த நிலையில் காஞ்சீபுரம் எல்லப்ப நகரில் அமைந்துள்ள ரூ.2½ கோடி மதிப்புள்ள ரவுடி ஸ்ரீதரின் வீடு மற்றும் காஞ்சீபுரத்தை அடுத்த திருப்பருத்திக்குன்றம் பகுதியில் உள்ள ரூ.1½ கோடி மதிப்புள்ள ரவுடி ஸ்ரீதரின் சகோதரர் செந்தில் என்பவரது வீடு போன்றவற்றை சென்னை அமலாக்கப்பிரிவு துணை இயக்குனர் ஆனந்தி உத்தரவின்பேரில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஜப்தி செய்து நோட்டீஸ் ஒட்டினார்கள். இந்த வீடுகளில் ரவுடி ஸ்ரீதர் மற்றும் செந்திலின் உறவினர்கள் வசிப்பதால் அவர்கள் கேட்டுகொண்டதற்கிணங்க அமலாக்கப்பிரிவினர் 10 நாட்களுக்குள் வீட்டை காலிசெய்ய அவகாசம் கொடுத்துள்ளனர்.
இதுவரை ரவுடி ஸ்ரீதரின் ரூ.165 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று ஜப்தி செய்து நோட்டீஸ் வழங்கப்பட்டபோது காஞ்சீபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story