குறிஞ்சிப்பாடி, பண்ருட்டியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா

குறிஞ்சிப்பாடி, பண்ருட்டியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நடந்தது.
குறிஞ்சிப்பாடி,
குறிஞ்சிப்பாடி உடையார் வீதியில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் மயானக்கொள்ளை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.
நேற்று முன்தினம் மயானக்கொள்ளை விழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அங்காளபரமேஸ்வரி அம்மன் வீதி உலா சென்றார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று சின்னகடை வீதி அங்காளம்மன் கோவிலிலும் மயான கொள்ளை விழா நடந்தது.
பண்ருட்டிபண்ருட்டியில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலல் மயானக்கொள்ளை விழா கடந்த 23–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி அ ம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, சாமி வீதி உலா நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் மயானக்கொள்ளை விழா நடந்தது. முன்னதாக அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, சாமி வீதி உலா நடந்தது.
இதில் எராளமான பக்தர்கள் கலந்து கெணண்டு சசமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவைர் ஏ.கே. மணி தலைமையிலான குபவினர் செய்திருந்தனர்.