சந்தவாசல் அரசுப்பள்ளியில் 89 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்


சந்தவாசல் அரசுப்பள்ளியில் 89 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்
x
தினத்தந்தி 27 Feb 2017 10:45 PM GMT (Updated: 2017-02-27T22:20:14+05:30)

கண்ணமங்கலம் அருகே உள்ள சந்தவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே உள்ள சந்தவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தலைமைஆசிரியர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். தூசி மோகன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயசுதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் கார்த்திக் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பிளஸ்–1 படிக்கும் 89 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். விழாவில் குப்பம் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் மனோகரன், முன்னாள் கவுன்சிலர் சசிக்குமார், வக்கீல் சங்கர், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story