திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம்


திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம்
x
தினத்தந்தி 28 Feb 2017 4:00 AM IST (Updated: 28 Feb 2017 12:25 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர்,

மாசி திருவிழா


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான வெயிலுகந்த அம்மன் கோவிலில் மாசி திருவிழா கடந்த 18–ந்தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 10 நாட்கள் நடந்த திருவிழாவில் தினமும் காலையில் அம்மன் பூஞ்சப்பரத்திலும், மாலையில் பூத வாகனம், சிம்ம வாகனம், காளை வாகனம், வேதாள வாகனம், அன்ன வாகனம், குதிரை வாகனம், மான் வாகனம் போன்றவற்றிலும் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தேரோட்டம்


விழாவின் நிறைவு நாளான நேற்று காலையில் தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் எழுந்தருளினார். காலை 6.15 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு ரத வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் கோவில் நிலையை வந்து சேர்ந்தது. விழாவில் கோவில் இணை ஆணையர் வரதராஜன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story