தூத்துக்குடியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2017 10:45 PM GMT (Updated: 2017-02-28T00:25:52+05:30)

தூத்துக்குடி மாவட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தூத்துக்குடி,

மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், மருத்துவ சான்று சமர்ப்பிக்கும் ஆசிரியர்களுக்கு தேர்வு பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் எளிதில் தேர்வு மையத்துக்கு சென்று வரும் வகையில், ஆசிரியர்களின் இருப்பிட முகவரியை அடிப்படையாக கொண்டு திருத்திய ஆணையை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோரிக்கை மனுவை முதன்மை கல்வி அலுவலரிடம் ஆசிரியர்கள் வழங்கினர்.

Next Story