லோடு ஆட்டோவில் திடீர் தீ விபத்து


லோடு ஆட்டோவில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 27 Feb 2017 10:45 PM GMT (Updated: 2017-02-28T00:26:25+05:30)

லோடு ஆட்டோவில் திடீர் தீ விபத்து

களக்காடு,

களக்காடு அருகே உள்ள கீழக்காடுவெட்டியில் இருந்து சீமைக்கருவேல மரத்தின் விறகுகளை ஏற்றிக் கொண்டு லோடு ஆட்டோ ஒன்று சுப்பிரமணியபுரத்தில் உள்ள செங்கல்சூளைக்கு சென்று கொண்டிருந்தது. கீழக்காடுவெட்டியை சேர்ந்த பெருமாள் (வயது 32) என்பவர் ஆட்டோவை ஓட்டிச் சென்றார்.

கேசவநேரி அருகே வந்த போது முன் பகுதியில் திடீரென தீ பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர், லோடு ஆட்டோவை சாலையோரமாக நிறுத்தி, தீயை அணைக்க முயற்சி செய்தார். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

இதுகுறித்து நாங்குநேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் லோடு ஆட்டோவின் முன் பகுதி தீயில் கருகி நாசமானது. லோடு ஆட்டோவில் திடீரென தீ பிடித்த காரணம் என்ன? என்று களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story