இயற்கை எரிவாயு திட்டத்துக்கு மெரினாவில் மாணவர்கள் திடீர் போராட்டம்


இயற்கை எரிவாயு திட்டத்துக்கு மெரினாவில் மாணவர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2017 10:00 PM GMT (Updated: 2017-02-28T00:47:26+05:30)

ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது.

சென்னை,

ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியது போல, ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்திற்கு எதிராக சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதாக மாணவர்கள் அமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று பகலில் மெரினா திருவள்ளுவர் சிலை அருகே 20 மாணவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே துணை கமி‌ஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 மாணவர்களை கைது செய்து அழைத்துச்சென்றனர். மெரினாவில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story