ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க எதிர்ப்பு: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க எதிர்ப்பு: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2017 11:00 PM GMT (Updated: 2017-02-28T01:11:33+05:30)

ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் சுகுமாறன் தலைமையில் விவசாயிகள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அண்ணாதுரையிடம் ஒரு கோரிக்கை மனுவும் கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக வறட்சி நிலவி வருகிறது. எனவே வறட்சி நிவாரணம் அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சம் இன்றி உடனடியாக வழங்க வேண்டும். சிறு, குறு விவசாயிகள் என பிரிக்கக்கூடாது. டெல்டா மாவட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேல் விவசாயிகள் உள்ளனர். எனவே அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

தடுத்து நிறுத்த வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் அத்துமீறி ஹைட்ரோ கார்பன் என்ற இயற்கை எரிவாயு எடுப்பதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். மீறினால் விவசாயிகள் தீக்குளிப்போம். தினமும் ஒரு போராட்டம் என அறிவித்து நடத்துவோம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கர்நாடக அரசும், மத்திய அரசும் அழிக்க நினைக்கிறது. மேலும் மத்திய அரசு உடனடியாக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர். 

Next Story