ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்


ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2017 10:15 PM GMT (Updated: 2017-02-28T01:32:23+05:30)

ஈரோட்டில் ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு,

ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஈரோடு தீயணைப்பு நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் வீரகோபால் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் தர்மலிங்கம் (வடக்கு), ராமகிருஷ்ணன் (தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாநில நிதிச்செயலாளர் ப.பெருமாவளவன், துணை பொதுச்செயலாளர் செல்வவில்லாளன், மையக்குழு உறுப்பினர் வீரவேந்தன் ஆகியோர் பேசினார்கள்.

அரியலூரில் தலித் சமூகத்தை சேர்ந்த நந்தினி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டதற்கு உரிய நீதி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை குறித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதில் ஒன்றிய செயலாளர்கள் ரங்கசாமி, கோவிந்தராஜ், கார்த்தி, ஒன்றிய தலைவர்கள் தேவராஜ், செந்தில் மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.


Next Story