மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது


மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 Feb 2017 10:15 PM GMT (Updated: 2017-02-28T01:51:54+05:30)

முன்விரோதம் காரணமாக மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டியை அடுத்த தூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வில்வமணி (வயது 37). இவருக்கும், அருகே உள்ள நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் (24) என்பவருக்கும் இடையே கிரிக்கெட் விளையாட்டின் போது முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக வில்வமணியின் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த அவரது மோட்டார் சைக்கிளை தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று கைதான தினேஷின் நண்பர்களான தூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு (23) சேதுபதி (23) ஆகிய மேலும் 2 பேரை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.


Next Story