கார் மோதி மூதாட்டி பலி


கார் மோதி மூதாட்டி பலி
x
தினத்தந்தி 27 Feb 2017 8:48 PM GMT (Updated: 2017-02-28T02:17:53+05:30)

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள இரூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியமமாள் (வயது 75). இவர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மூதாட்டி மீது மோதியது. இதில் அவர் பட

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள இரூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியமமாள் (வயது 75). இவர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மூதாட்டி மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயம் அடைந்த மூதாட்டியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெரியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான சென்னை காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story