பெரம்பலூர் அருகே குப்பை கிடங்கில் தீவிபத்து


பெரம்பலூர் அருகே குப்பை கிடங்கில் தீவிபத்து
x
தினத்தந்தி 27 Feb 2017 10:15 PM GMT (Updated: 2017-02-28T02:18:36+05:30)

பெரம்பலூர் அருகே குப்பை கிடங்கில் தீ விபத்து

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே நெடுவாசல் கிராமத்தில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. பெரம்பலூர் நகராட்சி பகுதியில் இருந்து பெறப்படும் குப்பைகள் இங்கு மலை போல் குவித்து வைக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு நிலைய அலுவலர் (பொறுப்பு) சதாசிவம் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து, குப்பை கிடங்கில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

Next Story