பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரும்பாவூரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரும்பாவூரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2017 10:15 PM GMT (Updated: 2017-02-28T02:18:37+05:30)

அரும்பாவூரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரும்பாவூர்,

ஆர்ப்பாட்டம்


பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் பாலக்கரை பகுதியில் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் தங்கவேல், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், அரும்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட 4–வது வார்டு பகுதியிலுள்ள சாக்கடை கழிவுநீர் விவசாய சாகுபடி நிலங்களில் பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்த சாக்கடை கழிவுநீரை வேறொரு பக்கம் செல்லும் வகையில் கால்வாய் வசதி அமைக்கப்பட வேண்டும்.

விவசாய கிணறுகளை சீரமைக்க...


மேலும் அப்பகுதியில் உள்ள 2 விவசாய கிணறுகள் தூர்ந்து போய் உள்ளது. இந்த கிணறுகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். சாக்கடை நீர் விவசாய நிலத்திற்குள் புகுந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் தமிழ்கணல் என்கிற ராஷித்அலி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் மற்றும் விவசாய சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முற்றுகை


ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்ட விவசாய சங்கத்தினர் கடைவீதி வழியாக சென்ற அரும்பாவூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story