புதுக்கோட்டையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


புதுக்கோட்டையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Feb 2017 10:45 PM GMT (Updated: 2017-02-28T02:18:53+05:30)

புதுக்கோட்டையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை,

வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பின் சார்பாக புதுக்கோட்டை கீழ ராஜவீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுத்துறை வங்கிகளை சீரழிக்கும் போக்கை கண்டித்தும், வராக்கடனை விரைந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 11–வது இருதரப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும், வங்கிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், வங்கிகளின் நிரந்தர பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் கே.என்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கத்தை சேர்ந்த பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் சிவானந்தம், ராஜூ, கலையரசன், சங்கர், ராஜேந்திரன் உள்பட வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story