முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை பார்வையிட்டு திருச்சி நீதிபதி ஆய்வு


முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை பார்வையிட்டு திருச்சி நீதிபதி ஆய்வு
x
தினத்தந்தி 27 Feb 2017 10:30 PM GMT (Updated: 2017-02-28T02:19:10+05:30)

முசிறி ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை பார்வையிட்டு திருச்சி நீதிபதி ஆய்வு

முசிறி,

முசிறி பைபாஸ்ரோடு பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் சுமார் ரூ.4.25 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிவடைந்து பல மாதங்களாகியும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட நீதிபதி குமரகுரு நீதிமன்ற வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம், பரிசல்துறை ரோடு பகுதியில் உள்ள உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளது பற்றி ஆலோசனை நடத்தினார். அப்போது முசிறி மாவட்ட உரிமையியல் நீதிபதி பழனிக்குமார், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வினோதா, முசிறி வருவாய் கோட்டாட்சித் தலைவர் ஜானகி ஆகியோர் உடனிருந்தனர். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story